News October 31, 2025
புதுச்சேரி: மக்கள் மன்ற நிகழ்ச்சி ரத்து

புதுச்சேரி, காவல்துறை டிஜிபி ஷாலினி சிங் உத்தரவுபடி ஒவ்வொரு சனிக்கிழமையும் அந்தந்த காவல் நிலையங்களில், மக்கள் குறை தீர்வு நாள் முகாம் மக்கள் மன்ற நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நாளை புதுச்சேரி விடுதலை நாள் விழாவை முன்னிட்டு, காவல் நிலையங்களில் நடைபெற இருந்த மக்கள் மன்ற நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக, சீனியர் எஸ்பி கலைவாணன் இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News November 1, 2025
புதுச்சேரி: வாழ்த்து தெரிவித்த கவர்னர்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், புதுச்சேரி விடுதலைத் திருநாளை ஒட்டி, மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த விடுதலைத் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதுச்சேரி மாநிலத்தின் விடுதலைக்காக பாடுபட்ட விடுதலைப் போராட்ட வீர்ர்களின் தியாகங்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
News October 31, 2025
புதுச்சேரி: மின்விளக்குகளால் சிலைகள் அலங்கரிப்பு

புதுச்சேரி விடுதலை நாள் விழா நாளை கடற்கரை சாலையில் கொண்டாடப்பட உள்ளது. விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை ஏற்க உள்ளார். இந்த நிலையில் புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை, கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை, நேரு சிலை நெல்லித்தோப்பு பகுதியில் சுப்பையா சிலைக்கு, இன்று மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
News October 31, 2025
புதுவையில் முகவர்களின் ஆலோசனை கூட்டம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற்று வருவதன் தொடர் நிகழ்வாக, இன்று புதுவை மீன்வளத்துறை அலுவலகத்தில் ஏம்பலம் மற்றும் பாகூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் கலந்து கொண்டனர்.


