News December 21, 2025

புதுச்சேரி: போலியோ முகாமை தொடக்கி வைத்த முதல்வர்

image

புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு பள்ளியில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கப்பட்டது. இந்த முகாமை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, அரசு கொறடா ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். குழந்தைகள் அனைவரும் போலியோ நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக, 5 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News December 27, 2025

புதுவை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

புதுவை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவனங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணி உதவுங்க…

News December 27, 2025

புதுவை: போலி மருந்து வழக்கு CBI-க்கு மாற்றம்

image

புதுச்சேரியில் போலி மருந்து விவகாரத்தை CBI விசாரிக்க உள்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் போலி மருந்து விவகாரத்தில் இதுவரை 16-நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, இவ்வழக்கை CBI மற்றும் NIA விசாரிக்க துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்தார். இந்த நிலையில், இவ்வழக்கை CBI-க்கு மாற்றி உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

News December 27, 2025

புதுவை: திருநள்ளாறு சனிபகவான் கோயிலில் கலெக்டர் ஆய்வு

image

காரைக்கால், திருநள்ளாறு சனிபகவான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமாக உள்ளதா என, கலெக்டர் ரவிபிரகாஷ் நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். மேலும், காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் அனுக்கிரக மூர்த்தியாக சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!