News August 30, 2025
புதுச்சேரி: பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு ஆணை

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணிபுரிந்து வரும் 10 உதவிப்பொறியாளர்களுக்கு செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணி உயர்வு ஆணையை முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று (29.08.2025) வழங்கினார். பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News August 29, 2025
காரைக்கால் காவல்துறை மக்கள் மன்றம் நிகழ்ச்சி ஒத்திவைப்பு

காரைக்கால் மாவட்டத்தில் காவல்துறையின் தொடர்ச்சியான சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணிகள் காரணமாக, 30/08/2025 சனிக்கிழமை அன்று (நாளை) காரைக்கால் மாவட்ட காவல்துறையின் மக்கள் மன்றம் நிகழ்வுகள் நடைபெறாது எனவும் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று காவல்துறை, காரைக்கால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 29, 2025
புதுச்சேரியில் நாளை பொதுமக்கள் குறை தீர்வு முகாம்

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி, புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் நாளை 30ந்தேதி பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெறும். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளைப் புகார் மூலம் தெரிவிக்கலாம்.” என கூறப்பட்டுள்ளது. SHARE IT NOW
News August 29, 2025
பாண்டி: 42 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த ரயில்

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாரில் 42 ஆண்டுகளுக்குப் பிறகு ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் நின்று செல்லும் நிகழ்ச்சியில் இன்று புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தலைவர், புதுச்சேரி மாநில குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன், சட்டமன்ற உறுப்பினர் சிவா ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி திருநள்ளாறு ரயில் நிலையம் வந்த பயணிகள் ரயிலை வரவேற்றனர்.