News August 18, 2025

புதுச்சேரி: பெண்ணிடம் ரூ.1.08 லட்சம் மோசடி

image

தட்டாஞ் சாவடி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அறிமுகமான சிலர், ஆன்லைனில் பகுதிநேர வேலையில் அதிகமாக சம்பாதிக்கலாம் எனக்கூறி, வாட்ஸ்ஆப் லிங்க் அனுப்பியுள்ளனர். அந்த லிங்க்கை கிளிக் செய்து, அதில் கூறியபடி ரூ.1.08 லட்சம் செலுத்தி டாஸ்குகளை முடித்துள்ளார். ஆனால், அதற்கான லாபமும், செலுத்திய பணத்தையும் திருப்பி தரவில்லை என கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News April 5, 2026

புதுவை: 200 யூனிட் மின்சாரம் இலவசம் – TVK விஜய்

image

புதுவையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய் முக்கிய வாக்குறுதிகளை அறிவித்தார். அதில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் எனவும், ஆளுநர் தலையீடு இல்லாத முழுமையான மாநில அந்தஸ்து பெற சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், மகப்பேறு உதவித் தொகையாக ரூ. 25,000 வழங்கப்படும் என்றும் கூறினார். ஷேர் பண்ணுங்க!

News April 5, 2026

புதுச்சேரி: மதுக்கடைகள் மூடப்படும் – எச்சரிக்கை..!

image

புதுச்சேரியில் உள்ள பல மதுபானக் கடைகள் மற்றும் மதுபான விடுதிகள், விற்பனையின் போது முறையான ரசீதுகளை வழங்குவதில்லை என தொடர் புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து, புதுச்சேரி கலால்துறை விதிகளை மீறி ரசீது இன்றி மதுபானங்கள் விற்பனை செய்தால் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் எச்சரித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

News April 5, 2026

புதுவை: தொழிற்கல்வி கட்டாயம் – கல்வித்துறை இயக்குனர்

image

புதுவை கல்வித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, புதுவை யூனியனில் 4 மண்டலங்களிலும் 65 பள்ளிகளில் 79 தொழில் பிரிவுகள் செயல்படுத்தப்படுகிறது. இருப்பினும் பல பள்ளிகள் 6வது பாடமாக தொழில் கல்வியை தேர்வு செய்வதில்லை. வருகிற கல்வடியாண்டில் ஆறாவது கல்வி பாடமாக தொழில் கல்வியை கட்டாயம் தேர்வு செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!