News February 2, 2025
புதுச்சேரி புறக்கணிப்பு : வைத்திலிங்கம் எம்.பி.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. (பிப்.1) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மத்திய நிதிநிலை அறிக்கையில் புதுவை மாநிலம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. புதுவைக்கான முன்னேற்றத்துக்கு எந்தவித நிதியுதவியையும் வழங்கவில்லை. சுற்றுலாவில் புதுவை மாநிலம் மேம்பட்டு வருவதாகக் கூறும் நிலையில், ரயில், விமான நிலைய விரிவாக்கத்துக்கான சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை என்றார்.
Similar News
News September 9, 2025
மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

புதுவை உருளையான் பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கோவிந்த சாலை, ஒதியன் சாலை போன்ற சில பகுதிகளில் குடிநீர் சம்பந்தமாக சில புகார்கள் வந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் ஆட்சியர் வளாகத்தில் பொதுப்பணித்துறை, நீர் பாசனத்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
News September 9, 2025
குடிநீரை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு

புதுவையில் மக்கள் மாசுபடிந்த குடிநீரை குடித்து வாந்தி, பேதியால் மூன்று பேர் இறந்துள்ளனர் 50க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் புதுச்சேரியில் பரபரப்பு நிலவுகிறது. இந்நிலையில் இது குறித்து பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் குடிநீரை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.
News September 9, 2025
புதுச்சேரி: மாவட்ட நிர்வாகம் முக்கிய தகவல்!

காரைக்கால் அரசு பொது மருத்துவ மனையில் வரும் வெள்ளிக்கிழமை (12.9.2025) அன்று புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வருகை புரிந்து, மருத்துவ சேவைகளை வழங்க உள்ளார்கள். காரைக்கால் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது.