News December 26, 2025

புதுச்சேரி: புத்தாண்டு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

image

புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நடந்தது. இதில் போலீஸ் அதிகாரிகள் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்கவும் நகர பகுதியில் குடிநீர், கழிப்பறை வசதி அமைக்கவும் உத்தரவிட்டார். மேலும் கண்காணிப்பை பலப்படுத்தவும், மக்களுக்கு சிரமம் இல்லாமல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் கூறியுள்ளார்.

Similar News

News December 26, 2025

புதுச்சேரி: முதல்வர் அதிரடி அறிவிப்பு

image

புதுச்சேரி மாநில மக்கள் பயன்பெறும் வகையில், ரேஷன் கடைகள் மூலம் ஒரு கிலோ கேழ்வரகு மாவு இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆரோக்கியமான உணவு பழக்கத்தை ஊக்குவிக்கவும், ஏழை எளிய மக்களின் ஊட்டச்சத்தை உறுதி செய்யவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே புதுச்சேரியில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும்.

News December 26, 2025

புதுச்சேரி: திருமண தடையா? கவலை வேண்டாம்!

image

புதுச்சேரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற வேதாந்தீஸ்வரர் திருக்கோயில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான வேதாந்தீஸ்வரருக்கு, அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

News December 26, 2025

புதுச்சேரி: கடலில் மாயமான மாணவன் பலி

image

தந்திரயான்குப்பம் கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மாணவன் ஒருவர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று மாலை கடலில் குளிக்கும் போது அலைக்குச் சிக்கி மாயமானதாக கூறப்படுகிறது. இன்று காலை அந்த மாணவனின் உடல் முத்தியால்பேட்டை அருகே கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!