News December 21, 2025

புதுச்சேரி: பிறந்தநாள் கொண்டாட சென்ற வாலிபர் பலி

image

புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்தவர் பெயிண்டர் தனுஷ் (21). இவர் தனது பிறந்தநாளை கொண்டாட அவரது நண்பர் சத்தியமூர்த்தியுடன் (22) மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது, அரும்பார்த்தபுரம் தக்ககுட்டை பகுதியில் உள்ள சாலை தடுப்பு சுவரில் கட்டுபாட்டை இழந்து வாகனம் மோதியது. இதில், சத்தியமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 25, 2025

புதுச்சேரி: ரூ.2,50,000 சம்பளத்தில் அரசு வேலை

image

தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA-ராணுவம், கடற்படை, விமானப்படை) காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 394
3. வயது: 18 – 21
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,50,000
5. கல்வித் தகுதி: 10th, 12th
6. கடைசி தேதி: 30.12.2025
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News December 25, 2025

புதுச்சேரி: கிறிஸ்துமஸ் பண்டிகையில் முதலமைச்சர்

image

புதுச்சேரி, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி புனித பாத்திமா அன்னை ஆலயத்தில், இன்று காலை நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டார். திருப்பலிக்கு பெருமளவில் மக்கள் திரண்டிருந்தனர். பின்னர், இருந்த பொதுமக்கள் மற்றும் பணியாளர்களும் முதலமைச்சருக்கு ஆசீர்வாதம் வழங்கினர். கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

News December 25, 2025

புதுவை: பொங்கலுக்குள் பல்வேறு திட்டம்!

image

“தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு, இதுவரை சுமார் 5 ஆயிரம் பணியிடங்களை நிரப்பி உள்ளோம். பொங்கலுக்குள் இடைநிலை ஆசிரியர்கள், 256 செவிலியர்கள் பணியிடங்களை நிரப்ப உள்ளோம். மாணவர்களுக்கான லேப்-டாப் பொங்கலுக்குள் வழங்கப்படும். கல் வீடு கட்டும் திட்டத்துக்கு 1700 பேருக்கு பொங்கலுக்குள் முதல் தவணைத் தொகை தரப்படும். மத்திய அரசு நமக்கு கூடுதல் நிதியை தரவுள்ளது.” என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!