News March 2, 2026
புதுச்சேரி: பிரதமரை சந்தித்து மாநில செயலாளர் மனு

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், விமான நிலையத்தில் பிரதமரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். அந்த மனுவில், புதுச்சேரி பிரிவின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குதல், 1963 யூனியன் பிரதேச சட்டத்தில் திருத்தம் செய்து கூடுதல் நிர்வாக மற்றும் நிதி அதிகாரங்கள் அளித்தல், நிலுவையில் உள்ள கடனை தள்ளுபடி செய்தல் ஆகியவை வலியுறுத்தினார்.
Similar News
News March 2, 2026
புதுச்சேரி: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு நாளை (03.03.2026) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளைய தினம் தேர்வுகள் இருந்தால் திட்டமிட்ட படி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 2, 2026
புதுச்சேரி: FREE-அ டாக்டர பாக்கனுமா? Click Here

புதுச்சேரி மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை <
News March 2, 2026
புதுச்சேரியில் +2 தேர்வெழுதிய 7,585 மாணவர்கள்

பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, இன்று துவங்கி வரும் 26ம் தேதிவரை நடக்கிறது. இத்தேர்வை, புதுச்சேரியில் உள்ள 84 தனியார் பள்ளிகளை சேர்ந்த 6,979 மாணவர்கள், காரைக்காலில் உள்ள 16 தனியார் பள்ளிகளை சேர்ந்த 606 மாணவ மாணவிகள் என மொத்தம் 7,585 பேர் எழுதினர்.


