News January 11, 2026

புதுச்சேரி: பாதி வழியில் பெட்ரோல் காலியா?

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <>’Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிப்பொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 17, 2026

புதுவை: மன உளைச்சலால் வழக்கறிஞர் தற்கொலை

image

பாகூர், குருவிநத்தம் இளையபெருமாள் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக நீரிழிவு, ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் இருதய அறுவை சிகிச்சையும் செய்துள்ளார். அதன்பின், வழக்கம் போல் கோர்ட்டிற்கு சென்று வந்த அவர், கடந்த 6 மாதங்களாக மன உளைச்சலுக்கு ஆளாகி ஜிப்மரில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் நேற்று அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என கூறப்படுகிறது.

News January 17, 2026

புதுவை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

புதுவை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 17, 2026

புதுவை: கோழிக்கறி திருடி விற்ற 4 பேர் கைது

image

புதுவை வில்லியனுார், சுல்தான்பேட்டை சுஜன் இவர் சுல்தான்பேட்டையில் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரிடம் அதே பகுதி அசார், இஸ்மாயில், ஜலால், கரிக்கலாம்பாக்கம் பாஸ்கரன் வேலை செய்கின்றனர். நேற்று முன்தினம் அசார், கோழி கழிவுகளை கொட்டும் வாளியில் 10 கிலோ கோழிக் கறியை மறைத்து எடுத்து சென்று விற்றுள்ளார். இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்கு பதிந்து உடந்தையாக செயல்பட்ட 4 பேரையும் கைது செய்தனர்.

error: Content is protected !!