News August 26, 2025
புதுச்சேரி: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் துணை தாசில்தார் பணிக்கான போட்டித்தேர்வு நடைபெறுவதையொட்டி, வரும் ஆக.,30-ம் தேதி மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி அறிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 29-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க..
Similar News
News August 26, 2025
விநாயகர் சதுர்த்தி: புதுச்சேரி முதல்வர் வாழ்த்து

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தியில் முதல் கடவுளாக விளங்கக்கூடிய விநாயகப் பெருமான் அவதரித்த இந்தத் திருநாள். அனைவரது வாழ்விலும் பொருள் வளம், மனவளம், உடல்நலம் என அனைத்து நலன்களையும் கொண்டுவந்து சேர்க்கட்டும். உங்கள் அனைவரது உள்ளமும் இல்லமும் விநாயகப் பெருமானின் பரிபூரண அருளாசி பெறட்டும் என்றார்.
News August 26, 2025
புதுச்சேரி: ரூ.81,100 சம்பளத்தில் வேலை!

புதுச்சேரி மக்களே, மத்திய அரசின் இந்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு Any டிகிரி, டிப்ளோமா போதுமானது. சம்பளம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.09.2025 தேதிக்குள் <
News August 26, 2025
காரைக்கால் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் காரைக்கால் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் மருத்துவமனை வெளிப்புற சிகிச்சை பிரிவை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் மாத மாத்திரை வாங்க வரிசையில் காத்திருந்த முதியோர்களிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்த ஆட்சியர் நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறைகளை தினந்தோறும் பராமரிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.