News December 29, 2025
புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய குடியரசு துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ,மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இவ்விழாவில் புதுச்சேரியின் ஆளுநர், புதுச்சேரி முதலமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Similar News
News February 13, 2026
புதுவை: ரூ.5 லட்சம் காப்பீடு! APPLY NOW

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. <
News February 13, 2026
புதுவை: ஓய்வுபெற்ற பேராசிரியர் வீட்டில் நகை திருட்டு

புதுச்சேரி, பாகூர் பகுதியில் உள்ள சரவணா கிரீன் சிட்டியில் ஓய்வுபெற்ற பேராசிரியர் காந்திமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் சிகிச்சைக்காக மதுரை சென்றுள்ளார். இந்த நேரத்தில், வீட்டின் பின்புற இரும்பு வாசலை உடைத்து, அலமாரியில் இருந்த இரண்டரை பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் அடிப்படையில் தற்போது பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 13, 2026
புதுச்சேரி: ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை

காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தரும் பிப்.14-ம் தேதி அன்று காரைக்கால் மாவட்டம் முழுவதும் ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 700 புதுச்சேரி போலீசார் மற்றும் 400 மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.” என்று தெரிவித்தார்.


