News July 25, 2024
புதுச்சேரி பட்ஜெட் 2024

புதுச்சேரி மாநில 15-ஆவது சட்டசபையின் 5-ஆவது கூட்டம் வருகிற 31-ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் சட்டசபையில் ஆளுநர் உரையாற்றுகிறார். ஆகஸ்ட் 1-ஆம் தேதி ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பின்னர், ஆகஸ்ட் 2-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார்.
Similar News
News August 16, 2025
புதுவை: யூனியன் வங்கியில் வேலை-APPLY NOW!

பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கியில் 250 வெல்த் மேனேஜர் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எம்.பி.ஏ., மற்றும் PGDBA/PGDBM/PGPM/PGDM டிப்ளமோ முடித்த 25 வயது நிறைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.93,960 வரை வழங்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள் <
News August 16, 2025
புதுவை: தனியார் நிறுவன காவலாளி மர்ம இறப்பு!

துத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (43). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல வேலைக்கு சென்றவர், காலையில் நாற்காலியில் அமர்ந்தபடி வாயிலும், மூக்கிலும் நுரை தள்ளிய நிலையில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என சேதராப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News August 16, 2025
கலால் துறை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

புதுச்சேரி கலால் துறை அலுவலகத்தில், புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள மதுபான உரிமம் பெற்ற ஓட்டல்கள் மற்றும் உணவகங்களின் உரிமையாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், புதுச்சேரி கலால் விதிகளில் குறிப்பிட்டுள்ள நேரக்கட்டுப்பாடுகளை, அனைத்து உரிமதாரர்களும் சரியாக கடைபிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டது.