News April 14, 2024
புதுச்சேரி: நாளை மல்லிகார்ஜுன கார்கே கார்கே வருகை

இந்தியா கூட்டணி சார்பில் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து நாளை மாபெரும் பொதுக்கூட்டம் தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Similar News
News November 4, 2025
புதுச்சேரி: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <
News November 4, 2025
புதுச்சேரியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், “புதுச்சேரி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூராக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள், அனுமதியின்றி பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள் மற்றும் கொடிகள் வரும் 6-ம் தேதி முதல் அகற்றப்படும். ஆகவே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
News November 4, 2025
பாகூர் அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேற்று சென்ற கலெக்டர் குலோத்துங்கன், டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் வருகை குறித்தும், போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளதா என ஆய்வு செய்து, பொது மக்களிடம் மருத்துவ சேவை குறித்தும் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து, பாகூரில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி அரசு மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வந்தார்களா, என ஆய்வு செய்தார்.


