News March 24, 2024
புதுச்சேரி: நாம் தமிழர் வேட்பாளர் இவர் தான்

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, புதுச்சேரியில் மருத்துவர் ரா.மேனகா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத் தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 28, 2026
புதுவையில் ஆட்டோ ஓட்டுனர் எடுத்த விபரீத முடிவு

புதுச்சேரி மாநிலம் கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (55). இவர் குடிப்பழக்கத்தால் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்து வந்தார். மேலும் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், மன உளைச்சலால் நேற்று முன்தினம் வீட்டு சமையலறையில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 28, 2026
புதுச்சேரியில் நிதியுதவி தவணை வழங்கல் விழா

புதுச்சேரி கம்பன் கலையரங்கில், நகர மற்றும் கிராம அமைப்பு மற்றும் குடிசை மாற்று வாரியம் சார்பில், ஒருங்கிணைந்த காமராஜர் வீட்டு வசதித் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கான முதல் தவணைத் தொகைக்கான காசோலைகளை துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் வழங்கினர்.