News November 21, 2025
புதுச்சேரி: நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

புதுச்சேரி உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் நிவாரணம்) சட்டம், 2013ன் பிரிவு 4ன் படி பத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரியும் ஒவ்வொரு நிறுவனமும், ஒரு உள் புகார் குழுவை அமைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் புதுச்சேரி நகராட்சிகள் சட்டம், 1973ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
Similar News

புதுவை: ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.30 லட்சம் இழப்பு!

புதுவை பிள்ளைச்சாவடி பகுதியை சேர்ந்த மஞ்சினி என்பவர், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களை இணையத்தில் தேடி வந்தார். அப்போது அவரது மொபைலுக்கு வந்த லிங்க் மூலம் ரூ.30 லட்சம் வரை பணம் செலுத்தி ஆன்லைனில் சூதாடியுள்ளார். ஆனால் இதன்மூலம் கிடைத்த பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முடியவில்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் சைபர் கிரைம் போலீசில் இது குறித்து புகார் அளித்தார்.
News November 21, 2025
புதுவை வீரர்கள் ஆசிய போட்டியில் பங்கேற்பு!

ஆசிய அளவிலான டாட்ஜ்பால் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில், வருகிற 23ஆம் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது. அதில் பங்கேற்க இந்திய அணி மலேசியா சென்று உள்ளது. இந்திய அணியில் புதுச்சேரி பாகூரை சேர்ந்த தர்ஷன், பத்மநாபன், தனிஷ்கா, விஜேஷ்வரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வீரர்களை புதுச்சேரி முதலமைச்சர், பாகூர் எம்எல்ஏ செந்தில்குமார் நேற்று வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.