News April 13, 2025
புதுச்சேரி தீயணைப்பு துறைக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுவை கடற்கரை சாலையில் தீயணைப்பு துறை அலுவலகம் உள்ளது. இன்று தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு தொடர்ந்து பல முறை போன் வந்தது. அதில் பேசிய நபர் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் அலுவலகம் முழுவதும் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாயுடன் வந்து தீயணைப்பு நிலையத்தை சோதனை செய்தனர். இதனால் இன்று பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News April 15, 2025
திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி எப்போது?

புதுச்சேரி மாநிலம் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் கடந்த மார்ச் 29ஆம் தேதி சனிப்பெயர்ச்சி என திருக்கணித பஞ்சாகப்படி கூறப்பட்டது. ஆனால் திருநள்ளாறு தேவஸ்தானம் சனிப்பெயர்ச்சி இந்தாண்டு இல்லை என அறிவித்திருந்தது. இந்நிலையில் திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி 2026 மார்ச் 06 ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளது. அதில் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறது. இதை SHARE செய்யவும்
News April 15, 2025
புதுவை ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து அரசு அலுவலகங்களில் அலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அந்த வகையில் நேற்று துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு அலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து இதுபோல் நடப்பதால் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
News April 14, 2025
புதுவையில் சுற்றுலா பயணி தொலைத்த நகை ஒப்படைப்பு

புதுச்சேரி அடுத்த ஒதியஞ்சாலை காவல் நிலைய பகுதியான பழைய கோர்ட் அருகே சுற்றுலாப் பயணி தவறவிட்ட ஏழு சவரன் தங்க நகை மற்றும் 3 ஃபோன் மற்றும் ஒரு லேப்டாப் பேகை காவல் நிலையத்தில் தலைமை காவலர் ஒப்படைத்தார். இதனை அடுத்து இன்று காணாமல் போன பொருட்களை உரியவர்களிடம் ஒதியஞ்சாலை காவல் நிலைய போலீசார் ஒப்படைத்தனர். மேலும், அந்த காவலருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.