News December 26, 2025
புதுச்சேரி: திருமண தடையா? கவலை வேண்டாம்!

புதுச்சேரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற வேதாந்தீஸ்வரர் திருக்கோயில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான வேதாந்தீஸ்வரருக்கு, அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 29, 2025
புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய குடியரசு துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ,மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இவ்விழாவில் புதுச்சேரியின் ஆளுநர், புதுச்சேரி முதலமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
News December 29, 2025
புதுச்சேரி: கவலை நீங்க இந்த கோயில் செல்லுங்கள்

புதுச்சேரியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற காமாட்சி அம்மன் திருக்கோயில், இந்த கோயிலுக்குச் சென்றால் தடைகள் நீங்கும், ஞானம், வெற்றி, செழிப்பு கிடைக்கும், மன அமைதி உண்டாகும், புதிய முயற்சிகளுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கும், குழந்தை பாக்கியம், குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற பல ஆன்மிக, மன நல நன்மைகளை பெறலாம் என்று ஆற்றல் வாய்ந்ததாக நம்பப்படுகிறது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.
News December 29, 2025
புதுச்சேரிக்கு விரைவில் புதிய முக்கிய திட்டங்கள்

புதுச்சேரி மாநிலத்திற்காக பல மகத்தானதிட்டங்கள் மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என குடியரசுத் துணைத்தலைவர் தெரிவித்தார். அடுத்த முறை பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி வருகை புரியும் போது, அந்த திட்டங்கள் செயல்வடிவம் பெறும் என்றும் அவர் கூறினார். புதுச்சேரியின் வளர்ச்சிக்காக மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும், விரைவில் பல முக்கிய திட்டங்கள் வெளிப்படும் என்றும் உறுதியளித்தார்.


