News December 25, 2024
புதுச்சேரி – திருப்பதி ரயில் சேவை ரத்து

திருப்பதியில் ரயில்வே பராமரிப்பு பணிகள் நடப்பதால் இன்று மாலை 3 மணிக்கு புதுவை டூ திருப்பதி புறப்படும், மெமு எக்ஸ்பிரஸ் ரயில் ரேணிகுண்டா வரை மட்டுமே செல்லும். அந்த பகுதியில் இருந்து திருப்பதி வரையிலான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல திருப்பதி டூ புதுவை நாளை காலை 4:00 மணிக்கு புறப்படும் மெமு எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
Similar News
News September 11, 2025
கூட்டுறவின் வளர்ச்சி என்ற தலைப்பிலான கருத்தரங்கம்

புதுச்சேரி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், இணைந்து நடத்தும் தேசிய பால்வள மேம்பாட்டு வாரிய வைர விழா கொண்டாட்டம் மற்றும் சர்வதேச கூட்டுறவு ஆண்டை கொண்டாடும் விதமாக கூட்டுறவின் வளர்ச்சி என்ற தலைப்பில், மாநில அளவிலான கருத்தரங்கம் புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
News September 11, 2025
துணை ஜனாதிபதிக்கு அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து

புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தமிழர்களுக்கு எல்லாம் பெருமை சேர்த்துள்ள நாட்டின் 15வது துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு புதுவை மாநில மக்கள் சார்பிலும், எனது சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
News September 11, 2025
புதுவையில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது

புதுச்சேரி மாநில மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இணைந்து, சுனாமி மற்றும் சுனாமியைத் தொடர்ந்து விளையும் பேரிடர்களின் போது அரசு இயந்திரம் மற்றும் பொதுமக்கள் எங்கனம் துரிதமாக செயல்பட்டு தம்மையும் குறித்து சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி, புதுச்சேரியில் இன்று காலை 08.00 மணி முதல் நடைப்பெற்று மதியம் சுமார் 02.00 மணியளவில் நிறைவு பெற்றது.