News December 3, 2025
புதுச்சேரி: தவெக தலைவர் விஜயின் ரோடு ஷோ ஒத்தி வைப்பு

புதுச்சேரியில் வரும் டிச.,5-ம் தேதி நடைபெற இருந்த தவெக தலைவர் விஜய்யின் ரோடு ஷோ ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக மக்கள் சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக காவல்துறை ரோடு ஷோவிற்கு அனுமதி மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 4, 2025
புதுவை: சிறையில் மொபைல் போன்கள்-4 கைதிகள் மீது வழக்கு

புதுச்சேரி, காலாப்பட்டு மத்திய சிறையில் 250-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு அதிகாரிகளின் திடீர் சோதனையின் போது, விசாரணை கைதிகள் அறை மற்றும் பொது கழிப்பிடம் அருகே பிளாஸ்டிக் கவர்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக 4 கைதிகள் மீது நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
News December 4, 2025
புதுச்சேரி: அமைச்சர் பெயரில் போலி அறிவிப்பு!

புதுச்சேரி உள்துறை பொறுப்பு வகித்து வரும் அமைச்சர் நமச்சிவாயமே கல்வித்துறைக்கும் பொறுப்பு வகித்து வருகின்றார். பள்ளிகளுக்கு மழை விடுமுறையை நேற்று அளித்திருந்தார். அந்த அறிவிப்பையே பயன்படுத்தி இன்று (04.12.25) விடுமுறை என்று போலியாக தயாரித்து சமூக வலைதளத்தில் சில சமூக விரோதிகள் வெளியிட்டனர். இது குறித்து அமைச்சர் அலுவலகம் சார்பில் காவல்துறையில் நேற்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
News December 4, 2025
புதுச்சேரி: MLA-வை தகுதி நீக்கம் செய்ய கோரி போராட்டம்

புதுச்சேரி ஏம்பலம் தொகுதி எம்எல்ஏ லட்சுமிகாந்தனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி பத்து ரூபாய் சட்ட இயக்கம் சார்பில் சட்டசபை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் இயக்க நிறுவனர் ரகுபதி தலைமையில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு லட்சுமிகாந்தனை தகுதி நீக்கம் செய்ய கோரி கோஷங்களை எழுப்பினர்.


