News September 5, 2025
புதுச்சேரி: ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு முதல்வர் வரவேற்பு

புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஆசிரியர் தின விழாவிற்கு பின்பு, செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார், மேலும் மக்கள் பொருட்கள் வாங்குவது அதிகரிக்கும் என்றும், வரி குறைப்பை ஈடுசெய்ய நம் மாநிலத்திற்கு எது தேவையோ அதனை மத்திய அரசு செய்து தரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
Similar News
News April 7, 2026
புதுச்சேரி: ATM கார்டு இருந்தா ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

புதுச்சேரி மக்களே, ஏடிஎம் கார்டு வச்சுருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <
News April 7, 2026
புதுச்சேரியில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுச்சேரி லாஸ்பேட்டையில், நேற்று (ஏப்ரல் 6) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பங்கேற்று உரையாற்றினார். அவர் அடிக்கடி புதுச்சேரிக்கு வர விரும்புவதாகவும், அதற்கு உங்கள் அன்புதான் காரணம் என்றும் கூறினார். எங்கே பார்த்தாலும் ஊழல், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாதுகாப்பற்ற தன்மை நிலவி வருவதாகவும், புதுச்சேரியை பாஜக ஆட்டிப்படைப்பதாகவும் ராகுல் குற்றம் சாட்டினார்.
News April 7, 2026
புதுச்சேரி: ராகுல் காந்தி சந்திப்பில் அதிர்ச்சி

புதுச்சேரியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் 16, திமுக 13, விசிக 1 என 30 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. திமுகவின் 5 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி வேட்பாளர்களும், ஒரு தொகுதியில் விடுதலை சிறுத்தைகளை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளரும் போட்டியிடுகின்றனர். இவர்கள் பொதுக்கூட்ட மேடைக்கு அழைக்கப்படாத நிலையில், ராகுல் காந்தி விமான நிலையத்தில் அவர்களை தனியாக சந்தித்து பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


