News October 31, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் எஸ்.எஸ்.பி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளோம் என்று கூறினால் அவர்களது தொடர்பை உடனடியாக துண்டித்து விடுங்கள். உங்களுடைய சிம்கார்டு ஆதார்கார்டை பயன்படுத்தி வங்கி கணக்கு தொடங்கி அதில் AWALA பணம் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது என்றும், அந்த பணம் தீவீரவாத செயலுக்கு பயன்படுத்த பட்டுள்ளது என்றும் மிரட்டி பணம் கேட்டால் நம்ப வேண்டாம்.” என கூறியுள்ளார்.
Similar News
News October 31, 2025
புதுவையில் முகவர்களின் ஆலோசனை கூட்டம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற்று வருவதன் தொடர் நிகழ்வாக, இன்று புதுவை மீன்வளத்துறை அலுவலகத்தில் ஏம்பலம் மற்றும் பாகூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் கலந்து கொண்டனர்.
News October 31, 2025
புதுச்சேரி: கவர்னரிடம் கோரிக்கை மனு

மோந்தா புயலால் பாதிக்கப்பட்ட ஏனாம் பகுதி மக்களுக்கு போதுமான உதவி வழங்கவும், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் புதுச்சேரி அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணா ராவ், புதுச்சேரி ராஜ்நிவாசில் கவர்னர் கைலாஷ் நாதன் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
News October 31, 2025
புதுச்சேரி: மக்கள் மன்ற நிகழ்ச்சி ரத்து

புதுச்சேரி, காவல்துறை டிஜிபி ஷாலினி சிங் உத்தரவுபடி ஒவ்வொரு சனிக்கிழமையும் அந்தந்த காவல் நிலையங்களில், மக்கள் குறை தீர்வு நாள் முகாம் மக்கள் மன்ற நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நாளை புதுச்சேரி விடுதலை நாள் விழாவை முன்னிட்டு, காவல் நிலையங்களில் நடைபெற இருந்த மக்கள் மன்ற நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக, சீனியர் எஸ்பி கலைவாணன் இன்று தெரிவித்துள்ளார்.


