News September 24, 2025

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சட்டப்பூர்வமான லாட்டரி நிறுவனம் பரிசுத்தொகையை வெளியிடுவதற்கு எந்த விதமான பணத்தையும் கோருவதில்லை. மேலும், இதுபோன்ற எந்தவொரு கூற்றுகளையும் அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் இல்லாமல் பணத்தை செலுத்த வேண்டாம். புதுச்சேரியில் லாட்டரி முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது ஆகையினால் லாட்டரி என்ற பெயரில் பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம்.” என எச்சரித்தனர்.

Similar News

News September 24, 2025

புதுவை: மின் நுகர்வோர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு இன்று முதல் நாளை 25.09.2025 ஆகிய தேதியில் same day Seva திட்டத்தின் கீழ் மின் விண்ணப்பம் பெறப்பட்ட, பெறப்படும் அதே நாளில் மாலை 6:00 மணிக்குள் மின் இணைப்பு வழங்கப்படும். இதில் விண்ணப்பம் காலை 11 மணிக்குள் ஆன்லைன் மூலமாக பதியப்பட்டு அந்த விண்ணப்பம் ஆனது உதவிப் பொறியாளர் நகரம்-2 அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றனர்.

News September 24, 2025

புதுவை: சாலையோர வியாபாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

image

காரைக்கால் நகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”காரைக்கால் நகராட்சியின் PMSVANidhi திட்டத்தின் கீழ் வங்கி கடன் பெற விண்ணப்பித்து, இதுவரை வங்கிகடன் பெறாத சாலையோர வியாபாரிகள், அனைவரும் உடனடியாக காரைக்கால் நகராட்சி NULM பிரிவை அணுகி பயன் பெறலாம்.” என காரைக்கால் நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

News September 24, 2025

புதுவை: காரைக்கால் பகுதியில் மாணவி தற்கொலை!

image

காரைக்கால் கோட்டுச்சேரியைச் சேர்ந்த கோமதி, கணவன் இறந்த நிலையில் மகள்களை வளர்த்து வந்துள்ளார். மூத்த மகள் பிரியதர்ஷினி, அரசு கல்லூரியில் படித்து வந்தார். இவர் வெளிநாடு செல்ல தாய் கோமதியிடம் பிரச்னை செய்தார். படிப்பு முடிந்ததும் செல்லலாம் என, கூறிய நிலையில், பிரியதர்ஷினி நேற்று முன்தினம் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

error: Content is protected !!