News September 19, 2025

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீனியர் எஸ்.பி நித்யா ராதாகிருஷ்ணன் வாட்ஸ்அப்/இன்ஸ்டாகிராம்/ஃபேஸ்புக்/டெலிகிராம் போன்ற சமூகவலைதளங்களில் தெரியாத நம்பர்களிலிருந்து ஆன்லைன் வர்த்தகத்தைப்பற்றி வரும் செய்திகளை நம்பவேண்டாம் யாரேனும் உங்களிடம் பணம் தருவதாக கூறி வங்கி கணக்குகள் மற்றும் சிம் கார்டு கேட்டால் அதனைகொடுக்க வேண்டாம் என்றனர். SHARE IT

Similar News

News September 19, 2025

புதுச்சேரியில் ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்

image

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு முதியோர் மற்றும் ஆதரவற்றோர் உதவித்தொகை வழங்கும் துவக்க விழா தட்டாஞ்சாவடி பகுதியில் நேற்று நடந்தது. விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி அரசு துறைகளில் காலி பணியிடங்கள் தகுதி அடிப்படையில் 4,500 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. இன்னும் 3 மாதங்களில் புதிதாக ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.

News September 19, 2025

புதுச்சேரி அரசு துறைகளில் ரூ.29 கோடி கையாடல்

image

புதுச்சேரி அரசின், 2023 – 24ம் ஆண்டு பட்ஜெட் மீதான மத்திய தணிக்கை அறிக்கை நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. பின், மக்களின் பார்வைக்காக, கலெக்டர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான முதன்மை கணக்காய்வு தலைவர் திருப்பதி வெங்கடசாமி புதுச்சேரியில், அரசு துறைகளில் 29 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும், மின்துறையில் மட்டும், 27 கோடி ரூபாய் கையாடல் நடந்துள்ளது.

News September 19, 2025

புதுவை அரசு கல்லூரியில் கேட்வே டூ பிரான்ஸ் 2.0

image

புதுவை பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில், பிரெஞ்சு துறை & தர உறுதியளிப்பு குழு சார்பில் ‘கேட்வே டூ பிரான்ஸ் 2.0’ என்ற வழிகாட்டுதல் கருத்தரங்கு நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் வீரமோகன் தலைமை தாங்கினார். பிரெஞ்சு பேராசிரியர் திருவேங்கடம் வரவேற்றார். கேம்பஸ் பிரான்ஸ் நிறுவன மேலாளர் ஸ்ருதி மரியம் ஜோசப், பிரான்சில் உயர்கல்வி வாய்ப்புகள், சர்வதேச மாணவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்கினார்.

error: Content is protected !!