News August 15, 2025

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தற்போது புதிதாக ‘ஸ்டார்லிங்க்’ என்ற செயலியில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என 100க்கும் மேற்பட்டோர் பல கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். எனவே, பொதுமக்கள் யாரும் இதுபோன்ற ஆன்லைனில் வரும் எந்தவித முதலீடு தொடர்பான செயலிகளை மொபைல்போனில் பதிவிறக்கம் செய்து பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.”

Similar News

News August 15, 2025

ஆசைவார்த்தை கூறி புதுச்சேரியில் பல கோடி ரூபாய் மோசடி

image

மல்டி லெவல் மார்க்கெட்டிங் அடிப்படையில், செல்போன் செயலியில் முதலீடு செய்தால் 30 நாளில் இரட்டிப்பு பணம் தருவதாக, சமூக வலைதளத்தில் தகவல் வைரலானதை நம்பி, புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதிகளைச் சேர்ந்த பலர், மர்ம நபர்கள் அனுப்பிய லிங்க்கில் இணைந்து கோடிக் கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளனர். இதில் ஏமாந்தவர்கள் நேற்று சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர் போலீசார் வழக்குப் பதிந்தனர்.

News August 15, 2025

சுதந்திர தினம் – புதுச்சேரி கவர்னர் வாழ்த்து

image

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் வெளியிட்டுள்ள செய்தியில், “சுதந்திர தினத்தை கொண்டாடுகின்ற இந்த நாளில், இந்திய குடிமக்கள் அனைவருக்கும் குறிப்பாக, புதுச்சேரி வாழ் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த சுதந்திரதின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் நாம் சுதந்திரம் அடைந்தோம். அவர்களுடைய தியாகங்களை நினைத்துப் போற்றுவது நம்முடைய கடமை.” என கூறியுள்ளார்.

News August 15, 2025

புதுவை: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை

image

பொதுத்துறை நிறுவனமான ‘ஓரியண்டல் இன்சூரன்ஸ்’ நிறுவனத்தில் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே <>க்ளிக் செய்து<<>>, வரும் ஆக.17-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்துத் தேர்வு புதுவையில் நடைபெற உள்ளது. மேலும் தகவலுக்கு <<17410947>>CLICK HERE<<>>. அரசு வேலை தேடுபவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!