News July 7, 2025

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நேற்று (ஜூன் 6) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வங்கிக் கணக்கில் வரும் பணத்திற்கு கமிஷன் தருவதாக யாராவது கேட்டால், அதனை நம்பி வங்கிக் கணக்கு மற்றும் சிம் கார்டை வழங்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உங்களுடைய பெயரிலான வங்கிக் கணக்கு மற்றும் சிம் கார்டுகள் பயன்படுத்தப்படுவதால், மோசடியில் உங்களுக்கும் தொடர்பு உடையதாக கருதப்படும் என எச்சரிக்கை. SHARE IT

Similar News

News July 7, 2025

புதுச்சேரி ஜிப்மரில் ரூ.1,30,000 சம்பளத்தில் வேலை!

image

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள Senior Resident பணிக்கு 100 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.67,700 முதல் ரூ.1,30,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த லிங்கை <>கிளிக் <<>>செய்து வருகிற ஜூலை 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News July 7, 2025

புதுவையில் பி.ஆர்க் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்

image

புதுவையில் நீட் அல்லாத படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ள சென்டாக், பி.ஆர்க் படிப்பிற்கும் விண்ணப்பம் வரவேற்றுள்ளது. ஆர்வம் உள்ள மாணவர்கள் வரும் 11ம் தேதி வரை www.centacpucherry.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் ஜே.இ.இ., ஸ்கோருடன் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 7, 2025

பாப்பாஞ்சாவடி மாரியம்மன் கோயிலில் திருட்டு

image

புதுவை பாப்பாஞ்சாவடி மாரியம்மன் கோவில் அதிகாரி இளங்கோவன் வழக்கம்போல் இன்று (ஜூலை 6) காலை கோவிலை திறந்து பார்த்த போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு முதலியார்பேட்டை போலீசில் புகார்
அளித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சிசிடிவி கேமிராவை
பார்த்தனர். அதில் 2 மர்மநபர்கள் உண்டியல் உடைந்து பணத்தை திருடி செல்வது தெரிந்தது. இதுகுறித்து 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!