News November 24, 2025
புதுச்சேரி: சீமான் மீது புகார் அளித்த நிருபர்

புதுச்சேரி வில்லியனூரில், நேற்று (நவ.23) நடந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினரால் தாக்கப்பட்ட கலைஞர் டிவி நிருபர் ராஜீவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் வில்லியனூர் காவல் நிலையத்தில் பத்திரிக்கை சங்க சக நிருபர்களுடன் சென்று நாம் தமிழர் கட்சி சீமான் மீதும், அவரது கட்சியின் மீதும் புகார் அளித்துள்ளார்.
Similar News
News November 24, 2025
புதுச்சேரி: டிகிரி போதும்..அரசு வேலை

இந்திய வானிலை ஆய்வு மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 334
3. வயது: 30 (SC/ST-35,OBC-33)
4. சம்பளம்: ரூ.29,200
5. கல்வித் தகுதி: டிகிரி
6. கடைசி தேதி:14.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News November 24, 2025
புதுச்சேரி: சீமான் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு!

புதுச்சேரி, வில்லியனூரில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், செய்தியாளரை தகாத வார்த்தைகளால் பேசியும், தனது கட்சியினரை கொண்டு தாக்குதல் நடத்திய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட 3 பேர் மீது, வில்லியனூர் காவல் நிலைய போலீசார்
296 b தகாத வார்த்தையில் திட்டுதல், 115(2) தாக்குதல், 351 (2) கொலை மிரட்டல் ஆகிய மூன்று பிரிவின் கீழ் நேற்று வழக்கு பதிந்தனர்.
News November 24, 2025
சீமானுக்கு புதுச்சேரி திமுக கண்டனம்

புதுச்சேரி, திமுக அமைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்ற அரசியல்வாதிகள் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு, முறையாக பதில் கூறாமல் எஸ்ஐஆர் குறித்து கேள்வி எழுப்பிய கலைஞர் தொலைக்காட்சி நிருபர் மீது, தாக்குதல் நடத்திய சீமான் மற்றும் அவரது கூட்டத்திற்கு, புதுச்சேரி மாநில திமுக தமது கண்டனத்தை தெரிவித்துள்ளது.


