News December 2, 2025

புதுச்சேரி: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

image

புதுச்சேரி மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ <>இணையதளத்தில்<<>> புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 4, 2025

புதுவை: சிறையில் மொபைல் போன்கள்-4 கைதிகள் மீது வழக்கு

image

புதுச்சேரி, காலாப்பட்டு மத்திய சிறையில் 250-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு அதிகாரிகளின் திடீர் சோதனையின் போது, விசாரணை கைதிகள் அறை மற்றும் பொது கழிப்பிடம் அருகே பிளாஸ்டிக் கவர்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக 4 கைதிகள் மீது நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

News December 4, 2025

புதுச்சேரி: அமைச்சர் பெயரில் போலி அறிவிப்பு!

image

புதுச்சேரி உள்துறை பொறுப்பு வகித்து வரும் அமைச்சர் நமச்சிவாயமே கல்வித்துறைக்கும் பொறுப்பு வகித்து வருகின்றார். பள்ளிகளுக்கு மழை விடுமுறையை நேற்று அளித்திருந்தார். அந்த அறிவிப்பையே பயன்படுத்தி இன்று (04.12.25) விடுமுறை என்று போலியாக தயாரித்து சமூக வலைதளத்தில் சில சமூக விரோதிகள் வெளியிட்டனர். இது குறித்து அமைச்சர் அலுவலகம் சார்பில் காவல்துறையில் நேற்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

News December 4, 2025

புதுச்சேரி: MLA-வை தகுதி நீக்கம் செய்ய கோரி போராட்டம்

image

புதுச்சேரி ஏம்பலம் தொகுதி எம்எல்ஏ லட்சுமிகாந்தனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி பத்து ரூபாய் சட்ட இயக்கம் சார்பில் சட்டசபை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் இயக்க நிறுவனர் ரகுபதி தலைமையில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு லட்சுமிகாந்தனை தகுதி நீக்கம் செய்ய கோரி கோஷங்களை எழுப்பினர்.

error: Content is protected !!