News July 30, 2024
புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர் நியமனம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றும் E. சந்திரசேகரன் புதுச்சேரி சிறப்பு நீதிமன்ற தேசிய புலனாய்வு முகமையின் வழக்கறிஞராக இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இவர் தேசிய நீதித்துறை அகாடமியின் பயிற்றுநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 17, 2025
புதுச்சேரியில் வழக்கத்தை விட அதிகமான சுற்றுலா பயணிகள்

சுற்றுலா பயணிகள் விரும்பும் பட்டியலில் உலகிலேயே புதுச்சேரி 2-ம் இடத்தை பிடித்துள்ளது. சுதந்திர தினத்தையொட்டி தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் கன மழை பெய்கிறது. இதனால் அங்குள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்ல முடியாத நிலை இதனால் புதுச்சேரியில் வழக்கத்தை விட இன்று அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
News August 16, 2025
புதுச்சேரி: 30 செல்போன்கள் பொதுமக்களிடம் ஒப்படைப்பு

புதுச்சேரியில் இன்று இணைய வழி காவல் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றத்தில் பொதுமக்கள் தவறவிட்ட 30 செல்போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.7,00,000 லட்சம் ஆகும். மேலும், தங்களுடைய வழக்கு சமந்தமாக குறைகளை தெரிவித்தனர். உடனடியாக அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆய்வாளருக்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தநித்யா ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
News August 16, 2025
பாண்டி: பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை!

ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையான (BRBNMPL) நிறுவனத்தில் காலி பணியிடங்கள் நிரப்படவுள்ளது. கல்வி தகுதி Deputy Manager பதவிக்கு B.E , B.Tech மற்றும் Process Assistant Grade-I பதவிக்கு ITI , Diploma முடித்திருக்க வேண்டும். Rs.24,500/- சம்பளம் முதல் Rs.88,638 வரை வழங்கப்படும். நேர்முக தேர்வுக்கு செல்ல விரும்பினால் இங்கே <