News January 18, 2026

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை

image

புதுச்சேரி மாநிலத்தில், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் வியூகங்கள் மற்றும் கூட்டணி குறித்து, அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கும், புதுச்சேரி மாநில காங்கிரஸ் முக்கியத் தலைவர்களுக்கும் இடையிலான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் முன்னிலையில், இந்த ஆலோசனைகள் நடைபெற்றது. இதில் புதுவையை சேர்ந்த முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News January 28, 2026

புதுவை: சாலையோரம் பிணமாக கிடந்த மூதாட்டி

image

புதுவை, சேதராப்பட்டு அருகே கரசூர் சுப்ரீம் நகர் பகுதியில், நேற்று முன்தினம் மாலை சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், மூதாட்டியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் இறந்த மூதாட்டி யார், எந்த ஊர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 28, 2026

புதுச்சேரி: 12th போதும்..அரசு வேலை! நாளை கடைசி…

image

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 312
3. வயது: 18 – 40
4. சம்பளம்: ரூ.44,900
5. தகுதி: 12-ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 29.01.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 28, 2026

புதுச்சேரி: 89.87 சதவீதம் படிவம் பூர்த்தி

image

புதுச்சேரியில், மொத்தம் உள்ள 10 லட்சத்து 21 ஆயிரத்து 578 வாக்காளர்களில், 9 லட்சத்து 18 ஆயிரத்து 111 பேர் கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பித்து, தேர்தல் துறையின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். இதில் 89.87 சதவீதம் தேர்தல் துறையின் படிவத்தை பூர்த்தி செய்துள்ளனர். புதுச்சேரியில் ஏற்கனவே இருந்த 962 ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை 1099 ஆக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!