News December 21, 2025
புதுச்சேரி: கூட்டணி குறித்து முதலமைச்சர் பதில்

எதிர்வரும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில், பாஜக உடனான கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த முதல் அமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுவதாக தெரிவித்தார்.
மாநில வளர்ச்சி குறித்து பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின், மத்திய அமைச்சர் மான்சுவிக் மாண்டியா ஆகியோரிருடன் ஆலோசனை நடத்தப்பட்டது என்றார்.
Similar News
News December 30, 2025
புதுவை: 10th போதும்-போஸ்ட் ஆபிஸில் வேலை!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது அவசியமாகும். விருப்பமுள்ளவர்கள் <
News December 30, 2025
புதுவை: பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

காரைக்கால் நகர போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தைக்கால் தெரு பின்புறம் உள்ள பொது இடத்தில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் காரைக்காலைச் சேர்ந்த திருமுருகன், சக்திவேல், ராமன், குருபிரசாத், விஜய், திரௌபதி வெள்ளைசாமி, சவுந்தரராஜன் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
News December 30, 2025
புதுவை: குளத்தில் மூழ்கிய கூலித்தொழிலாளி பலி

காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா(29). கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் பெரியகாலாப்பட்டு முருகன் கோவில் குளத்தில் மீன் பிடித்தபோது திடீரென குளத்தில் தவறி விழுந்து மூழ்கியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காலாப்பட்டு தீயணைப்பு வீரர்கள், ராஜாவை தேடினர். இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் ராஜாவை நேற்று மதியம் குளத்தில் இருந்து சடலமாக மீட்டனர்.


