News November 28, 2025

புதுச்சேரி: குடிநீர் தடை அறிவிப்பு!

image

புதுச்சேரி, பொதுசுகாதார செயற்பொறியாளர் வெளியிட்ட செய்தியில், தனகோடி நகர் மற்றும் தர்மாபுரி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் நாளை 29ம் தேதியும், குருமாம்பேட் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில், வரும் 1ம் தேதியும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் நாளை தனகோடி நகர், தர்மாபரி, லெனின் வீதி, சபரி நகர், பகுதிகளிலும், வரும் 1ம் தேதி குருமாம்பேட் பகுதியிலும் குடிநீர் தடைபடும் தெரிவித்தாரர்.

Similar News

News November 28, 2025

புதுச்சேரி: சாலை மறியலில் ஈடுபட்ட எம்எல்ஏ கைது

image

மத்திய அரசின் திட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் மீது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அவதூறு பரப்பி வருவதாக சட்டமன்ற உறுப்பினர் தலைமையில், செல்லிப்பட்டு பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். செல்லிப்பட்டு சாலை சந்திப்பில் 100க்கும் மேற்பட்ட எம்எல்ஏ ஆதரவாளர்கள், பொதுமக்கள் போராட்டம் செய்ததை தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் உட்பட அனைவரையும் போலீசார் இன்று கைது செய்தனர்.

News November 28, 2025

புதுச்சேரியை புரட்டி போட போகும் புயல்

image

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி வருகிறது. இது புதுச்சேரியை ஒட்டிய கடற்பகுதியை கடந்து செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் புதுச்சேரியில் நாளை (நவ.29) பலத்த சூறைக்காற்றுடன் கூடிய அதிகனமழை கொட்டித் தீர்க்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News November 28, 2025

புதுச்சேரி: சூறாவளிக்காற்று எச்சரிக்கை

image

புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குநர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்தியில், குமரிக்கடல் பகுதிகளில் இன்று 28ம் தேதி முதல் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவித்தனர்.

error: Content is protected !!