News March 28, 2025
புதுச்சேரி, காரைக்காலில் இன்று 10ம் வகுப்பு பொது தேர்வு துவக்கம்

புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்கி, வரும் 15ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. பகுதியில் 20 தேர்வு மையங்கள், காரைக்கால் பகுதியில் 6 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன அமைக்கப்பட்டுள்ளன. பகுதியில் 146 தனியார் பள்ளிகளை பள்ளிகளைச் 7,278 பேரும், 573 தனித் தேர்வர்களும், காரைக்கால் பகுதியில் 28 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 497 பேரும், 284 தனித் தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர்.
Similar News
News March 31, 2025
புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

சுற்றுலா நகரமான புதுச் சேரிக்கு, வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். கடந்த சில வாரங்களாக பிளஸ் 2 பொதுத்தேர்வு காரணமாக புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை சற்று குறைவாக இருந்தது. இந்நிலையில் ரமலான், யுகாதி போன்ற பண்டிகைகளை முன்னிட்டு, தொடர் விடுமுறை காரணமாக நேற்று முன்தினம் முதல் புதுச்சேரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
News March 31, 2025
புதுவை பல்கலைக்கழகத்தில் வேலை

புதுவை பல்கலைக்கழகமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Field Investigator பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு நிரப்ப உள்ளதாகவும், 04.04.2025ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறும், இது குறித்த மேலும் தகவலுக்கு பல்கலைக்கழகத்தை தொடர்ப்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
News March 31, 2025
இன்ஸ்டா விளம்பரத்தை நம்பி பெண் ஏமாற்றம்!

வில்லியனுாரைச் சேர்ந்த அக்ஷயா, இன்ஸ்டாகிராமில் பகுதி நேர வேலை வாய்ப்பு தொடர்பான விளம்பரத்தை பார்த்து, அதிலிருந்த வாட்ஸ் ஆப் எண்ணை தொடர்பு கொண்டபோது, எதிர்முனையில் பேசிய மர்மநபர் பகுதி நேர வேலைக்கு செயலாக்க கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய அவர், 95 ஆயிரம் ரூபாயை அனுப்பி ஏமாற்றம் அடைந்ததாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்