News December 14, 2025
புதுச்சேரி: கடலோர காவல் பிரிவு போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி கடலோர காவல் பிரிவு இன்ஸ்பெக்டர் தியாகராஜன் விடுத்துள்ள அறிவிப்பில், ”உப்பளம் மைதானம், பழைய துறைமுகம், புதிய துறைமுகம், கடற்கரை பகுதிகள் உட்பட, கடலோர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், மது அருந்துதல் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு மீனவ பஞ்சாயத்து நிர்வாகிகள் மற்றும் மீனவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Similar News
News March 2, 2026
புதுச்சேரி: அதிகாரிகளுக்கு முக்கிய பயிற்சி

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, காரைக்கால் மாவட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தொழில்நுட்பப் பயன்பாடுகள் குறித்த காணொளி வழிப் பயிற்சி அளிக்கப்பட்டது. ராணுவத்தினர் மற்றும் அரசுப் பணியாளர்கள் போன்ற சேவை வாக்காளர்களின் விபரங்களைப் பதிவு செய்தல் மற்றும் பராமரிப்பது குறித்து விளக்கப்பட்டது.
News March 2, 2026
புதுச்சேரியில் இன்று +2 பொதுத்தேர்வு தொடக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, இன்று துவங்கி வரும் 26ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வை, புதுச்சேரியில் உள்ள 84 தனியார் பள்ளிகளை சேர்ந்த 6,979 மாணவ, மாணவிகள், காரைக்காலில் உள்ள 16 தனியார் பள்ளிகளை சேர்ந்த 606 மாணவ மாணவிகள் என மொத்தம் 7,585 பேர் எழுத உள்ளதாக கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி தெரிவித்துள்ளார்.
News March 1, 2026
புதுச்சேரி: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!


