News December 24, 2025
புதுச்சேரி: கடலுக்கடியில் பரதநாட்டியம் ஆடிய சிறுமி

சுற்றுச்சூழல் மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதுச்சேரியைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை சிறுமி ஆராதனா ஒரு புதுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளார். அவர் ராமேஸ்வரம் அருகே உள்ள கடல் பகுதியில் சுமார் 20 அடி ஆழத்தில், முழுமையான பரதநாட்டிய உடையில், ஆபரணங்கள் மற்றும் ஒப்பனையுடன் நிலப்பரப்பில் உள்ள மேடையில் ஆடுவது போல மிக நேர்த்தியாக நடனமாடியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Similar News
News February 9, 2026
புதுச்சேரி: 41 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள்

தேர்தல் நேரம் நெருங்குவதால், புதுச்சேரி மாநிலம் முழுவதும் மொத்தம் 41 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. புதுச்சேரி நகரில் மட்டும் 15 இடங்களில் இந்தச் சாவடிகள் உடனடியாக அமைக்கப்பட உள்ளன. காரைக்காலில் 10, ஏனாமில் 10 மற்றும் மாஹேவில் 6 என மாநிலம் முழுவதும் தேர்தல் துறை இதற்கான டெண்டர் கோரியுள்ளது. இந்த பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
News February 9, 2026
புதுவை: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

புதுவை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <
News February 9, 2026
புதுச்சேரி: அடித்து கொலை – குற்றவாளி கைது

விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த இடையஞ்சாவடி கிராமத்தை சேர்ந்தவர் வினோத் குமார் (40). தச்சுத்தொழிலாளியான இவர் புதுச்சேரி ஆலங்குப்பத்தில் உள்ள தனியார் பாரில் கடந்த வாரம் மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மூன்று பேரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஹரி-யை (33) நேற்று கைது செய்தனர்.


