News September 8, 2025
புதுச்சேரி எஸ்.பி எச்சரிக்கை, மக்கள் ஏமாறாதீங்க!

புதுச்சேரி சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் நேற்று கூறுகையில், ஆன்லைனில் வரும் விளம்பரத்தை நம்பி யாரும் மொபைல் ஆப்களில் முதலீடு செய்து பணத்தை ஏமாற வேண்டாம். பெரும்பாலும் இது போன்ற மோசடி ஆப்கள் வெளிநாட்டில் இருந்து இயக்கப்படுகிறது.ஆகவே, மொபைல் ஆப்கள் மூலம் ஆன்லைன் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்றார். அனவைருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News September 8, 2025
புதுச்சேரி: ரூ.1,60,000 சம்பளத்தில் வேலை!

புதுச்சேரி மக்களே, இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 75 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளம் ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும், ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 27.09.2025 தேதிக்குள் <
News September 8, 2025
அமைச்சரை வாழ்த்தி அரசு கொறாடா!

இன்று (செப். 8, 2025) பிறந்தநாள் கொண்டாடும் உள்துறை அமைச்சர் அ. நமச்சிவாயத்துக்கு, புதுச்சேரி அரசு கொறடாவும், இந்திரா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆறுமுகம் (ஏ.கே.டி) நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். மேலும், அவருக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து வழங்கியும் அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். உடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
News September 8, 2025
பொதுப்பணித்துறை அலுவலகத்தை எம்எல்ஏ முற்றுகை

உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்த 30-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, நேரு எம்.எல்.ஏ தலைமையில் பொதுமக்கள் இன்று (செப். 8) பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஒரு பிரிவினர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.