News October 18, 2025
புதுச்சேரி: உதவியாளர் பணியிட அறிவிப்பு ரத்து

புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குனர் முத்துமீனா நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணிக்கு, விண்ணப்பதாரர்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, வலைதளத்தை அணுக முடியவில்லை. அதனால், முந்தைய அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. புதிய அறிவிப்பு வெளியிடப்படும், விண்ணப்பித்த நபர்கள் மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
Similar News
News December 11, 2025
புதுச்சேரி: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE IT!
News December 11, 2025
புதுச்சேரி: ஈஷா சிங்கிற்கு அமைச்சர் நமச்சிவாயம் பாராட்டு

புதுச்சேரியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக விஜயின் பொதுக்கூட்டம் அமைதியாக நிறைவடைந்தது. இதில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் சிறப்பாக காவல் ஏற்பாடுகளை செய்த முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஈஷா சிங்கிற்கு, புதுச்சேரி மாநிலம உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
News December 11, 2025
மகாகவி பாரதியார் பிறந்தநாள் – முதல்வர் மரியாதை

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாள் விழா இன்று புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு புதுச்சேரி ஆளுநர் மாளிகை அருகே உள்ள அவர் சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி சபாநாயகர் செல்வம் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


