News December 27, 2025
புதுச்சேரி: உதவித்தொகை உயர்வு அறிவிப்பு

புதுச்சேரியில் முதியோர் உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும். குடும்பத்தலைவிகளுக்கு அரசு வழங்கி வரும் ரூ.1,000 உதவித் திட்டம், ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டு விரைவில் வழங்கப்படும். மேலும், கோதுமை போல் 1 கிலோ கேழ்வரகு மாவு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
Similar News
News February 6, 2026
நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம்

காரைக்கால் மாவட்ட விவசாயிகள் நெல் அறுவடை இயங்திரங்களுக்கான வாடகையை நிர்ணயம் செய்து செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை ஏற்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.2500 முதல் ரூ.2600 வரை வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், டயர் பொருத்திய அறுவடை இயந்திரங்களுக்கு ரூ.1900 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
News February 6, 2026
புதுவை: தச்சுத் தொழிலாளி அடித்துக் கொலை!

புதுச்சேரி கோரிமேடு அருகே மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் தச்சுத் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரத்தை சேர்ந்த தச்சர் வினோத் (35), ஆலங்குப்பம் மதுக்கடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கார்த்திகேயன், சஞ்சய், ஹரி ஆகிய மூவரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
News February 6, 2026
புதுச்சேரியில் உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடக்கம்

புதுச்சேரியில் ஏழை குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடக்கம். குடும்ப தலைவிகளுக்கான உயர்த்தப்பட்ட நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். சிவப்பு குடும்ப அட்டைதாரர்களான சுமார் 70 ஆயிரம் மகளிருக்கு, மாதந்தோறும் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்படும். ஆதரவற்றோருக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.500 உயர்த்தப்பட்டுள்ளது.


