News February 18, 2025
புதுச்சேரி: உடல் உறுப்பு தானம் செய்தால் அரசு மரியாதை!

புதுச்சேரி மாநிலத்தில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய சுகாதார துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும் வருகின்ற சுதந்திர தினத்தன்று உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்தாரை கவுரவிக்க உள்ளதாகவும் சுகாதார துறை இயக்குனர் ரவிசந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 1, 2025
புதுச்சேரி: துணை தாசில்தார் தேர்வு

புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் 30 துணை தாசில்தார் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த மே 28ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இப்பணிக்கு மொத்தம் 37,349 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த நிலையில் போட்டித்தேர்வு 101 தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மையங்களில் தொடங்கி நடைபெற்றது. இத்தேர்வினை 37,349 பேர் எழுதினார்கள்.
News September 1, 2025
புதுவையில் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுவையில் மேக வெடிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க எச்சரிக்கை வீடுகளை விட்டு வெளியேறும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News August 31, 2025
புதுச்சேர: புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMs) மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சாதனங்கள் (VVPATs), புதுச்சேரிக்கு இன்று கொண்டு வரப்பட்டுள்ளன. ரெட்டியார்பாளையத்தில் அமைந்துள்ள தேர்தல் துறை அலுவலக வளாகத்தில் உள்ள EVM பாதுகாப்பு அறையில் தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தலைமையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.