News December 23, 2025

புதுச்சேரி: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

Similar News

News December 31, 2025

புதுச்சேரி மக்களே..நாளை இதை செய்ய மறக்காதீங்க!

image

நாடு முழுவதும் இன்று இரவு புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. அவ்வகையில் இவ்வருடம் முழுவதும் செல்வ செழிப்புடன் எந்த குறையுமின்றி வாழ, மகாலட்சுமியை வழிபடலாம் என்பது ஐதீகம். இதற்கு உங்கள் வீட்டில் உலோக ஆமை, துளசி செடி, சிரிக்கும் புத்தர் மற்றும் தேங்காய் வைத்து லட்சுமியை வழிபட்டால் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம் என கூறப்படுகிறது. மேலும் அருகில் உள்ள லட்சுமி கோயிலுக்கு சென்று வழிபடுங்கள்.

News December 31, 2025

புதுச்சேரி: அஞ்சலி செலுத்திய எதிர்க்கட்சித்தலைவர்

image

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தந்தை அசோகன், நேற்று இரவு (30.12.2025) உட‌ல் நலக் குறைவால் இயற்கை எய்தினார். இன்று (31.12.2025) அரியலூர் மாவட்டத்தி‌ல் உ‌ள்ள அவ‌ர்களது இல்லத்தில், புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் இரா.சிவா தலைமையில், மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News December 31, 2025

புதுச்சேரி: சட்டமன்ற உறுப்பினர் புத்தாண்டு வாழ்த்து

image

வரும் ஆண்டு அனைவரது வாழ்க்கையிலும், வசந்த காற்றை வீச செய்யட்டும் என புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகரன் புத்தாண்டுவாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் 2025ல் பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா பல்வேறு வெற்றிகளை கண்டதாகவும், அதே உத்வேகத்தோடு அடுத்த ஆண்டில் அடி எடுத்து வைப்பதாகவும் தெரிவித்துள்ளார். 2026ல் ஒவ்வொரு குடிமகனின் இல்லங்களிலும் வசந்தம் வீசட்டும் என்று கூறியுள்ளார்.

error: Content is protected !!