News January 15, 2026

புதுச்சேரி: இலவசமாக அரிசி வேண்டுமா?

image

புதுச்சேரி மக்களே, மத்திய அரசின் (PMGKAY) திட்டத்தின் கீழ் வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கபடுகிறது. இதற்கு AAY, PHH அட்டைதாரர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க ரேஷன் கடையில் கை ரேகை பதிவு செய்து இலவசமாக பெறலாம். அட்டையிருந்தும் வழங்கவில்லை என்றால் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் புகாரளிக்கலாம். SHARE!

Similar News

News February 2, 2026

புதுச்சேரி: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

புதுச்சேரி மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

புதுவை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்!

News February 2, 2026

புதுவை: கைதி மது அருந்திய விவகாரம்.. போலீஸ் சஸ்பெண்ட்

image

புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரவுடி சதீஷ் (எ) மணிகண்டன் மது அருந்தியிருந்த விவகாரத்தில், கைதியின் பாதுகாப்புக்குச் சென்ற காவலர் தேவ ரஞ்சித் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.  இதுகுறித்து விசாரணை நடத்திய புதுவை டிஐஜி உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர் ஆறுமுகம் அறிக்கை தாக்கல் செய்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!