News December 16, 2025
புதுச்சேரி: இந்தியா-பாகிஸ்தான் போர் வெற்றி தினம்

1971 இந்தியா-பாகிஸ்தான் போர் வெற்றி தின விழா, புதுச்சேரி அரசு சார்பில் கடற்கரை சாலை, போர் நினைவிடத்தில் இன்று நடைபெற்றது. இதில் கவர்னர் கைலாசநாதன், முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
Similar News
News December 18, 2025
புதுவை: ஆதிதிராவிடர் நலத்துறை கலந்தாய்வு கூட்டம்

புதுவை சட்டபேரவையில் இன்று (டிச.18) முதல்வர் ரெங்கசாமி தலைமையில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் நெடுங்காடு – கோட்டுச்சேரி MLA சந்திர பிரியங்கா கலந்து கொண்டு, அவரது தொகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறையில் நிலவி வரும் பல்வேறு துறை சார்ந்த பிரச்சினைகளை எடுத்துரைத்தார். மேலும், இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.
News December 18, 2025
புதுச்சேரியில் அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கக் காலக்கெடு!

புதுச்சேரி தேர்வு முகமையின் சார்பு செயலர் ஜெய்சங்கா், “புதுவை அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்காக, ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வு, ஒருங்கிணைந்த மேல்நிலைப் பள்ளி நிலைத்தோ்வு மற்றும் மேல்நிலை எழுத்தர் பணிக்கு 20-ம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம். இளநிலை நூலக உதவியாளர் மற்றும் இதர 9 பதவிகளுக்கு 22-ம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம்.” என தெரிவித்துள்ளார்.
News December 18, 2025
புதுச்சேரி: புதிய பணியிடங்களை உருவாக்க கோரிக்கை

புதுச்சேரி மாநில காவல்துறை மாநாடு தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் நேற்று நடைபெற்றது. விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி “ஊர்காவல் படை வீரர் தேர்வில் குழப்பம் உள்ளது. இதைச் சரி செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஊர்காவல் படை வீரர்களுக்கும் பணி வழங்கப்படும்.
மத்திய அரசிடம் புதிய பணியிடங்களை உருவாக்க அனுமதியும் கோரியுள்ளோம். என்று தெரிவித்தார்.


