News November 26, 2025
புதுச்சேரி: ஆளுநர் மாளிகையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

இந்திய அரசியல் அமைப்பு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுவதை ஒட்டி, புதுச்சேரி மாநில ஆளுநர் மாளிகையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு, அரசியல் அமைப்பு தின உறுதி மொழியை வாசிக்க, அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
Similar News
News November 28, 2025
புதுச்சேரி: வங்கி வேலை அறிவிப்பு

மத்திய பொதுத்துறை நிறுவனமான ‘BANK OF BARODA’ வங்கியில், 2700 அப்ரிண்டிஸ் (apprentice) பயிற்சி இடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 20 – 28 வயதுக்குட்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது மாதம் ரூ.15,000 சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News November 28, 2025
புதுச்சேரி: பாஜக தேசிய பொதுச்செயலாளருக்கு வரவேற்பு

புதுச்சேரிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பாஜக தேசிய பொதுச்செயலாளர் (அமைப்பு) சந்தோஷ் நேற்று புதுச்சேரிக்கு வந்தார். அவரை தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி சிலை அருகே உள்ள தனியார் ஹோட்டலில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி மற்றும் பூங்கொத்து வழங்கி வரவேற்றார். அப்போது பாஜக மாநில தலைவர் வி.பி ராமலிங்கம் உடன் இருந்தார்
News November 28, 2025
புதுச்சேரி: பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி, புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில், நாளை (நவ.29) பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெறும் என புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் இன்று தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளைப் புகார் மூலம் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


