News November 13, 2025
புதுச்சேரி: ஆம்னி பஸ்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

புதுவை உழவர்கரை போக்குவரத்து துறை அதிகாரிகள் நேற்று மாலை புதுச்சேரியில் இருந்து இயக்கப்படும் ஆம்னி பஸ்களில், பாதுகாப்பு வசதிகள் முறையாக உள்ளதா?, முதலுதவி பெட்டிகள் உள்ளனவா?, தீயணைப்பு சாதனங்கள் வைக்கப்பட்டுள்ளதா?, அவசர காலத்தில் பயணிகள் வெளியேறும் கதவுகள் பயன்பாடு எப்படி உள்ளது? என்றும், புதுவைக்குள் இயக்க உரிய அனுமதி இருக்கிறதா? என திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
Similar News
News November 13, 2025
புதுச்சேரி: டிகிரி போதும் வங்கியில் வேலை!

அரசு வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாகவுள்ள 2700 Apprentice பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,700 (தமிழ்நாடு – 159)
3. சம்பளம்: ரூ.15,000
4. கல்வித் தகுதி: Any Degree
5. வயது வரம்பு: 20 – 28 (SC/ST-33, OBC-31)
6. கடைசி தேதி: 01.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 13, 2025
புதுவையில் 3 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

புதுவை போலீசில் 3 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி போக்குவரத்து (வடக்கு) பிரிவில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு சைபர் கிரைமிற்கும், அங்கு பணியாற்றிய தியாகராஜன் கடலோர காவல்படை பிரிவிற்கும், கடலோர காவல் படை பிரிவில் பணியாற்றிய வேலயன் போக்குவரத்து (வடக்கு) பிரிவிற்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை போலீஸ் தலைமையக எஸ்பி மோகன்குமார் வெளியிட்டார்.
News November 13, 2025
புதுவை: 3 மாதம் சிறை தண்டனை எச்சரிக்கை!

புதுவை மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுவையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடக்கிறது. இதற்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணியை செய்கின்றனர். இந்நிலையில் வாக்குச்சாவடி அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தால் அல்லது அவர்களுக்கு இடையூறு விளைவித்தால், 3 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.2500 அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.


