News January 7, 2026
புதுச்சேரி: ஆன்லைன் மோசடியில் ரூ.5.25 லட்சம் இழப்பு

முதலியார்பேட்டை பகுதியில் வசிக்கும் நபருக்கு, போலியான ஆர்.டி.ஓ. பெயரில் இ-செலான் லிங்க் வந்துள்ளது. அதனை நம்பி வங்கி விவரங்களை அதில் உள்ளிட்டதால், அவரது கணக்கில் இருந்து ரூ.3,64,718 பறிக்கப்பட்டது. இதேபோல் மதகடிப்பட்டு, வில்லியனூர், அரியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் ரூ.5,25,148 ஆன்லைன் மோசடியில் பொதுமக்கள் இழந்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 6, 2026
காரைக்கால் பகுதியில் மின்தடை அறிவிப்பு

காரைக்கால் மின்னழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் காரணமாக (07.02.2026) சனிக்கிழமை காலை 10.00 மணி முதல், மதியம் 2.00 மணி வரை வரவு குட்டை வீதி, ஆனை பிள்ளை மறைக்கர் வீதி கால்மாட்டு வீதி, காதர் சுல்தான் வீதி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் மின் விநியோகம் இருக்காது என்று உதவி பொறியாளர் அறிவித்துள்ளார்.
News February 6, 2026
புதுச்சேரியில் LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கைது

கரகல்குவாரி விவகாரத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் டிவி நிருபர் மீது, திமுக எம்.எல்.ஏ ஒருவர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி புதுச்சேரி திமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது, ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மற்றும் லஜக நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
News February 6, 2026
காரைக்கால் நகராட்சி சார்பில் முக்கிய அறிவிப்பு

காரைக்கால், திருநள்ளார் ரோட்டில் உள்ள வாரசந்தைத் திடலில், பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர் வருகையை ஒட்டியும், அது தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாலும், மாவட்ட நிர்வாகத்திடம் சந்தை திடலை ஒப்படைக்க வேண்டி இருப்பதால் எதிர்வரும் (08.02.2026) மற்றும் (15.02.2026) ஆகிய தினங்களில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வாரசந்தை நடைபெறும் என்று பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


