News December 6, 2025
புதுச்சேரி: ஆந்திராவைச் சேர்ந்த 2 பெண்கள் கைது!

புதுச்சேரியில் சாலையைக் கடக்க உதவி செய்வது போல நடித்து, 78 வயது மூதாட்டியிடம் இருந்த 22 சவரன் நகைகள் மற்றும் ரூ.1 லட்ச பணத்தையும் திருடிச் சென்ற ஆந்திராவைச் சேர்ந்த சாரதா, வள்ளி என்ற இரு பெண்களை போலீசார் கைது செய்தனர். மூதாட்டி காசிக்கு செல்வதற்காக தனது தோழியிடம் கொடுத்து வைத்திருந்த நகைகளை திரும்பி வாங்கிக் கொண்டு வரும்போது மூதாட்டியிடம் இருந்து நகையை திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 6, 2025
புதுவை: வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த தாய்&மகன்

வாழைக்குளம் அருகே உள்ள அக்காசாமி மடம் வீதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சுரேஷ்(46). இவர் முத்தியால்பேட்டையைச் சேர்ந்த விஷாலி என்பவருக்கு ஒரு வழக்கிலிருந்து வரவேண்டிய தொகையை வாங்கி கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் என்பவரும் அவரது தாய் விஜயா என்பவரும் வழக்கறிஞர் சுரேஷிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் பெரிய கடை போலீசார் தாய் மற்றும் மகனை தேடி வருகின்றனர்.
News December 5, 2025
புதுச்சேரி: சுகாதாரத் துறைக்கு கண்டனம்

புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா வெளியிட்டுள்ள செய்தியில், இந்த போலி மருந்துகள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள், ரசாயன கலவைகள் எல்லாம் எங்கிருந்து பெறப்பட்டன. அனுமதி இல்லாமல் புதுச்சேரிக்குள் அவை எப்படி துழைந்தன. இதன் பின்னணியில் யார் யாரெல்லாம் இயங்குகின்றனர், இது குறித்து பொதுமக்களுக்கு இந்த அரக வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும். இது குறித்து சுகாதாரத்துறை விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
News December 5, 2025
புதுச்சேரி: டிகிரி போதும்..அரசு வேலை

இந்திய வானிலை ஆய்வு மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 134
3. வயது: 30 (SC/ST-35,OBC-33)
4. சம்பளம்: ரூ.29,200
5. கல்வித் தகுதி: டிகிரி
6. கடைசி தேதி: 14.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.


