News April 11, 2025
புதுச்சேரி அரசு பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும்

புதுச்சேரி பிஆர்டிசி ஒப்பந்த ஊழியர்களாக தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பலகட்ட போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் சிவக்குமார் நேற்று போராட்டகாரர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் பணி நிரந்தரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஊழியர்கள் அறிவித்து, இன்று முதல் பேருந்து இயக்கப்படும் என அறிவித்தனர்.
Similar News
News August 27, 2025
புதுச்சேரி: ரூ.35,400 சம்பளத்தில் வேலை!

புதுச்சேரி மக்களே, டிஎன்ஏ கைரேகை கண்டறியும் மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு 10th, 12th, Any டிகிரி போதுமானது. சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.09.2025 தேதிக்குள் <
News August 27, 2025
புதுச்சேரி: மதுக்கடைகளை மூட உத்தரவு!

புதுச்சேரி மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வருகிற 31ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஊர்வலம் சாரம் அவ்வை திடலில் இருந்து தொடங்கி காமராஜர் சாலை, நேருவீதி, காந்தி வீதி, அதிதி ஓட்டல் சந்திப்பு, எஸ்.வி.பட்டேல் சாலை வழியாக கடற்கரை காந்திசாலையை அடைகிறது. இதனால் வருகிற 31ஆம் தேதி மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவை, புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க.
News August 27, 2025
புதுச்சேரி: 121 கிலோ மெகா சைஸ் லட்டு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரி 45 அடி சாலையில் உள்ள ஜெயின் ஸ்வீட்ஸ் என்ற கடையில் 12வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி இன்று விழா கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி வித்தியாசமான முறையில் 121 கிலோவில் மெகா சைஸ் லட்டு செய்து விநாயகரை வழிபட்டனர். இந்த மெகா லட்டுவை வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.