News May 10, 2024
புதுச்சேரி அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அரசு பள்ளியின் தேர்ச்சி சதவீதம் வெளியாகியுள்ளது. புதுச்சேரி அரசு பள்ளியில் 81.72% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 75.61% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 87.43 % தேர்ச்சி அடைந்துள்ளனர். காரைக்கால் அரசு பள்ளியில் 65.42 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 56.89 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 73.89 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News July 8, 2025
85 ஆண்டுகளுக்குப் பின் கோயில் கும்பாபிஷேகம்!

புதுவை கருவடிகுப்பத்தில் உள்ள சுடுகாட்டில் அரிச்சந்திர மகாராஜா கோயில் உள்ளது.1940ம் ஆண்டு 2வது கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு கும்பாபிஷேகம் நடக்கவில்லை. இந்நிலையில், 85 ஆண்டுகளுக்குப் பிறகு கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு கோயிலில் உள்ள வசிஷ்ட மகரிஷி, விஸ்வாமித்ரா மகரிஷி, மகாகால ருத்ர பைரவர், சந்திரமதி உடனுறை அரிச்சந்திர சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
News July 7, 2025
புதுவை: வங்கியில் வேலை! மாதம் ரூ.85,000 சம்பளம்

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் புதுவை உட்டபட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். இதற்கு <
News July 7, 2025
புதுச்சேரி ஜிப்மரில் ரூ.1,30,000 சம்பளத்தில் வேலை!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள Senior Resident பணிக்கு 100 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.67,700 முதல் ரூ.1,30,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த லிங்கை <