News March 26, 2025
புதுச்சேரியை மாநகராட்சியாக தரம் உயர்த்த முடிவு

புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, “புதுவையில் உள்ள புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளை இணைத்து புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் மற்றும் புதுச்சேரி சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஆஷா பணியாளர்களுக்கு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக ஊதியம் உயர்த்தி வழங்கப்படும்” என தெரிவித்தார்.
Similar News
News September 16, 2025
காரைக்கால்: மதுபான கடைகளுக்கு கலால் துறை எச்சரிக்கை

காரைக்கால் கலால் துறை துணை ஆணையர் மதுபான கடைகளுக்கும் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:- புதுச்சேரி கலால் துறை வீதி 196(E) சட்டம் 1970 படி 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மதுபான பாட்டில்கள் விற்கவோ, மதுபான கடைகளில் மது அருந்த அனுமதிப்பதோ சட்டப்படி குற்றம் என்றும் அவ்வாறு 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மதுபான பாட்டில்களை விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News September 16, 2025
புதுச்சேரி பெண்களுக்கு இலவச மருத்துவ முகாம்

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேள் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சுகாதாரத்துறை மூலம் வருகின்ற 17/09/2025 அன்று புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் ‘ஆரோக்கியமான பெண்களே குடும்பத்தின் பலம்’ என்ற திட்டத்தினை மத்திய சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின்படி புதுச்சேரி அரசு தொடங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் துவக்க விழாவில் முதல்வர் அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News September 16, 2025
புதுச்சேரி: ரூ.35,000 சம்பளம், தவறவிடாதீர்கள்!

புதுச்சேரி: படித்த இளைஞர்களுக்கு ரயில்வேயில் வேலை பார்க்க ஆசை இருந்தால் இந்த வாய்ப்பு உங்களுக்குத்தான்.
⏩பிரிவு: மத்திய அரசு வேலை
⏩துறை: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB)
⏩பணி: Station Controller
⏩காலியிடங்கள்: 368
⏩சம்பளம்: ரூ.35,400
⏩வயது வரம்பு: 20 முதல் 33 வரை
⏩கல்வி தகுதி:Any Degree
⏩ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
⏩கடைசி தேதி: 14.10.2025
பயனுள்ள இந்த தகவலை SHARE பண்ணுங்க!