News December 16, 2025
புதுச்சேரியில் 85,531 வாக்காளர்கள் நீக்கம்

புதுச்சேரிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 85,531 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். SIR பணிகளுக்கு முன்பு 8.51 லட்சம் வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது 7.64 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதேநேரம், நீக்கப்பட்ட வாக்காளர்களில் தகுதியானவர்கள் பெயரை பட்டியலில் சேர்க்க, தேவையான ஆவணங்களுடன் ஜன.15 வரை விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் குலோத்துங்கன் அறிவித்துள்ளார்.
Similar News
News December 17, 2025
ஜெட் வேகத்தில் விலை.. ஒரே நாளில் ₹11,000 உயர்வு

வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிராமுக்கு ₹11 உயர்ந்து ₹222-க்கும், கிலோ வெள்ளி ₹11,000 உயர்ந்து ₹2,22,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த டிச.8-ம் தேதி ₹1,98,000-க்கு விற்பனையான வெள்ளி விலை, 9 நாள்களில் ₹24,000 அதிகரித்துள்ளது.
News December 17, 2025
எந்த சீட்டில் உட்காருவீங்க?

நீங்க விமானத்திலோ, பஸ்சிலோ ஏதோ ஒரு பொது போக்குவரத்தில் டிக்கெட் புக் பண்றீங்க. வண்டியில் ஏறி உள்ளே அமர செல்லும் போது, இவங்கெல்லாம் இதே போல ஆளுக்கு ஒரு சீட்டில் உட்கார்ந்திருக்காங்க. நீங்க எந்த சீட்டில் வேணாலும் உட்காரலாம். ஆனால், ஒரு சீட்டில் மட்டுமே இறங்கும் வரை உட்காரணும். இந்த Situation-ல் எந்த சீட்டில் போய் உட்காருவீங்க? அவங்க கூட என்ன பேசுவீங்க.. மறக்காம கமெண்ட் பண்ணுங்க?
News December 17, 2025
Impact வீரராக ஆடப்போகிறாரா தோனி?

2026 IPL சீசனுடன் தோனி ஓய்வு பெறுவார் என Ex CSK வீரர் உத்தப்பா கூறியுள்ளார். அணியின் எதிர்கால நலன்கருதி ஏலத்தில் கார்த்திக் சர்மா, பிரசாந்த் வீர் மீது CSK கோடிகளை கொட்டியது. Mhatre, Samson, Ruturaj, Dube, Brevis என பக்காவாக டாப் 5 செட் செய்துள்ள CSK, அடுத்தடுத்த வரிசைகளில் புதிய வீரர்களை களமிறக்கவுள்ளதாம். இதனால் ஃபினிஷிங் ரோலில் தேவைக்கு ஏற்ப, IMPACT வீரராக தோனி களமிறங்குவார் என கூறப்படுகிறது.


