News January 30, 2025

புதுச்சேரியில் 8 மேல்நிலை எழுத்தர்கள் இடமாற்றம்

image

புதுச்சேரி அரசு சார்பு செயலர் ஜெய்சங்கர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் மேல்நிலை எழுத்தர்கள் எட்டு பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் அதன்படி விஜயன் பொதுப்பணி துறையில் இருந்து தலைமைச் செயலகத்திற்கும்ரோகினி சட்டத்துறையில் இருந்து தலைமைச் செயலகத்திற்கும்புவனேஷ் வணிகவரித் துறையில் இருந்து சட்டத்துறைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்

Similar News

News February 19, 2025

அரசு நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22ம் தேதி இறுதி கட்ட கலந்தாய்வு

image

சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் புதுச்சேரி அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்கள் சென்டாக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அரசு, நிர்வாக ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்களுக்கு இறுதிக்கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் வரும் 22ம் தேதிக்குள் தங்களது விருப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.

News February 19, 2025

கூட்டுறவு கல்லூரியில் புதிய கட்டிடம் முதல்வர் திறந்து வைத்தார்

image

புதுச்சேரி பிராந்தியம் மாஹேவில் உள்ள கூட்டுறவு கல்லூரியில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்தை இன்று முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக தலைமை தாங்கி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சட்டபேரவை தலைவர் செல்வம் , துணை சபாநாயகர் ராஜவேலு , சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News February 19, 2025

புதுவை: துணை தாசில்தார்கள் 8 பேர் திடீர் இடமாற்றம்

image

பல்வேறு இடங்களில் பணியாற்றி வரும் 8 துணை தாசில்தார்கள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில், 7 பேர் பத்திர பதிவு துறைக்கு மாற்றப்பட்டனர். காரைக்கால் தாலுகா அலுவலக துணை தாசில்தார்கள் தண்டாயுதபாணி, தீனதயாளன், வில்லியனுார் சப் கலெக்டர் அலுவலக துணை தாசில்தார் ஷிலாராணி ஆகியோர், பத்திர பதிவுத்துறைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான ஆணையை துணை கலெக்டர் வினயராஜ் நேற்று வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!